நடமாடும் ரேஷன் கடையால் தற்போது செயல்படும் ரேஷன் கடைகள் மூடப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

அடுத்த மாத்த்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடமாடும் ரேஷன் கடையால் தற்போது செயல்படும் ரேஷன் கடைகள் மூடப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்
அமைச்சர் செல்லூர் ராஜு (கோப்புப் படம்)
  • Share this:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள4449 கூட்டுறவு சங்கங்களும் கணிணி மையம் ஆக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தேவையான பொருள்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைத்து வருவதாக தெரிவித்தார்.மேலும் நகர்புறங்களில் ரேசன் கூட்டம் அதிகரிப்பது, மற்றும் கடைகள் வாடகைக்கு கிடைக்காதை கருத்தில் கொண்டு மக்களுக்கு  பயனளிக்கும் வகையில் நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதாகவும் அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.


மேலும் படிக்க...விரைவில் ஆலோசனை நடத்த உள்ள ரஜினிகாந்த் - சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்கள்

ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவில்லை, என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading