சென்னையில் 2014ம் ஆண்டு நகரும் நியாய விலைக்கடைகளின் சேவையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதன் மூலம் 54 தெருக்களில் வசிக்கும் 27,000-க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் நிலையில், திருப்பூர், திருச்சி, கோவை தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 277 மலை கிராமங்களில் வசிப்பவர்களும் பயன்பெற்று வருகின்றனர். இதை விரிவுபடுத்தும் வகையில் கடந்த சட்டமன்ற மானிய கூட்டத் தொடரின்போது, அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடங்கப்படும் என விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி சென்னையில் 400, நாகையில் 262, கிருஷ்ணகிரியில் 168, திருவண்ணாமலையில் 212 கடைகள் உட்பட மொத்தம் 3,501 நகரும் ரேஷன் கடைகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும். அங்கு குடும்ப அட்டைதாரர்களின் ரேஷன் கடை ஊழியர்களே, அவர்களுக்கான பொருட்களை வழங்குவார்கள். இதனால், தேவையற்ற அலைச்சல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருத்தல் போன்றவை தவிர்க்கப்படும். இந்த திட்டத்தோடு, திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Also read: பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு - சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்திய வனத்துறையினர்
இந்த அரிசியில் இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச் சத்துகள் அடங்கியிருக்கும் என்றும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையை போக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மின்சாரம் மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து காலங்களில் பிறருக்கு சமிக்ஞை அனுப்ப உதவும் ஆபத்து பொத்தான் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.