Home /News /tamil-nadu /

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் துப்பாக்கிகளை கடத்துவது போல ஓசூரில் இருந்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு துபாய்க்கு கடத்தல்

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் துப்பாக்கிகளை கடத்துவது போல ஓசூரில் இருந்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு துபாய்க்கு கடத்தல்

Youtube Video

ஓசூரில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் கொள்ளைக் கும்பல் அக்கக்காகப் பிரித்து வெளிநாட்டில் உள்ள தரகருக்கு ஆறரைக் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. செல்போன் கொள்ளையில் நடந்தது என்ன?

மேலும் படிக்கவும் ...
  செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் தாதாவின் கடைசி மகனாக நடித்த சிம்பு, தான் வசிக்கும் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு துப்பாக்கிகளை கடத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில், ஓசூரில் இருந்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு துபாக்கி கடத்தப்பட்டுள்ளன. இந்த கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான ராஜேந்தர் சவுகான் கைது செய்யப்பட்டதை அடுத்து, செல்போன் கொள்ளையில் நடந்தது என்ன என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். செல்போன்கள் அக்கக்காகப் பிரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது எப்படி?

  சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எம்.ஐ. உதிரிபாக நிறுவனத்தில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,920 செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பைக்குப் புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மேலுமலை என்ற இடத்தில் 8 கொள்ளையர்கள் ஒரு லாரியில் சென்று கன்டெய்னர் லாரியை வழிமறித்தனர். ஓட்டுனரையும் உதவியாளரையும் கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டு விட்டு லாரியை கடத்திச் சென்றனர். சூளகிரி அருகே உள்ள அழகுபாவி என்ற இடத்தில் லாரி்யை நிறுத்தி அதில் இருந்த அனைத்து செல்போன்களையும் அள்ளிக் கொண்டு லாரியை மட்டும் விட்டுத் தப்பிச் சென்றனர். இந்தக் கொள்ளை வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சார்பத் இனத்தைச் சேர்ந்த கொள்ளைய்ரகள்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகமடைந்தனர். இதனால், தனிப்படையினர் மத்திய பிரதேச மாநிலம் விரைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

  குற்றவாளிகள் தங்கள் வாகனத்தின் பதிவெண்ணை அடிக்கடி மாற்றி வந்ததால் அவர்களைப் பின்தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் 33 இடங்களைச் சேர்ந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்தனர்.  அவற்றின் அடிப்படையிலும் திருடப்பட்ட செல்போன்களின் சிக்னல்கள் அடிப்படையிலும், ராஜேந்தர் சவுகான், பரத் தேஜ்வானி, அமீதாபா தத்தா உள்ளிட்ட 10 குற்றவாளிகளைக் கைது செய்தனர்.

  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்போன் கொள்ளை எப்படி நடந்தது என்பது அம்பலமானது. இந்தக் கொள்ளையின் மூளையாக செயல்பட்டவர் மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் சவுகான். மாமா, காக்கா, ராஜன் என பல புனை பெயர்களில் திரிந்த ராஜேந்தர் சவுகான், தனது ஊரைச் சேர்ந்த 18 பேரை இந்த கொள்ளைக் கூட்டணியில் இணைத்து அரங்கேற்றியுள்ளார்.

  முதலில் 13,960 செல்போன்களையும் சின்ன சின்னப் பொருட்களாக அக்கக்காகப் பிரித்துள்ளது இந்தக் கொள்ளைக் கும்பல். பின்னர் அவற்றை, போபால் விமான நிலையத்தில் இருந்து டில்லி, மும்பை, கொல்கத்தா, கெளகாத்தி, ராய்ப்பூர் விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த விமான நிலையங்களில் இருந்து, ஒட்டுமொத்தமாக திரிபுரா மாநிலத்தின் அகர்தலா விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து சாலை வழியாக பங்களாதேஷ் நாட்டின் தாகா நகருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து துபாயில் உள்ள அப்பாஸ் என்ற கொள்ளையனுக்கு அனுப்பியுள்ளனர்.

  இந்த திருட்டு செல்போன்களுக்கு அப்பாஸ் மொத்தம் ஆறரைக் கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை, பரத் தேஜ்வானி, பரத் அஸ்வானி மற்றும் அமீர்கான் ஆகிய மூன்று பேர் மூலம் ஹவாலா பரிமாற்றமாக கொடுத்து அனுப்பியுள்ளார் அப்பாஸ். இந்தக் கும்பலிடம் இருந்து 7 டிரக்குகளையும், திருடப்பட்ட செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  மேலும் படிக்க...தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த இயக்குநர் பா. ரஞ்சித்தின் 38-வது பிறந்தநாள் இன்று..

  இந்நிலையில் துபாயில் வசிக்கும் அப்பாஸ் உள்ளிட்ட 15 குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். சினிமாக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Dubai, Mobile phone, Robbery, Smuggling

  அடுத்த செய்தி