ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் வருது..மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் - அலெர்ட் கொடுக்கும் ராமதாஸ்

 

கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதே போல் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Madurai High Court, Mobile phone, Temple