நாகை மாவட்டம் சிக்கல் கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சுமதி பக்கிரிசாமி தம்பதியினர் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல இன்று வயல் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் மின்கசிவு காரணமாக வீட்டின் கூரையில் மின்கம்பி உரசி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வீடு எரிவதைக் கண்ட குழந்தைகள் பதரி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை மற்றும் கீழ்வேளூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைப்பதற்குள் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தால் வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து தீக்கிறையாயின.
Also see:
அந்த இடத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் அமைப்பினர் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு 15 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கினார்கள். சமையல் பாத்திரங்கள், குடங்கள், பாய், அடுப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அவர்கள் வழங்கினர். அப்போது அக்கட்சியின் நாகை மத்திய மாவட்டச் செயளாலர் செய்யது அனஸ், நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் சித்து, நாகை ஒன்றியச் செயலாளர் சிக்கல் இளங்கோ, நாகை நகரச் செயலாளர் தனபாலன், மகளிர் அணி மாவட்டச் செயளாலர் அனுராதா உள்ளிட்டோர் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Makkal Needhi Maiam, Nagapattinam