முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக அமைச்சர்களை கண்டித்து ம.நீ.ம ஒட்டிய போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

தமிழக அமைச்சர்களை கண்டித்து ம.நீ.ம ஒட்டிய போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

அமைச்சர்களை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஒட்டிய போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

அமைச்சர்களை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஒட்டிய போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

மதுரையில் தமிழக அமைச்சர்களை கண்டித்து மக்கள் நீதி மையத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அமைச்சர்கள் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஒருமையில் பேசி வருவதாகவும் அதனைக் கண்டித்து மதுரையில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் தமிழக அமைச்சர்களே நம்மவரை ஒருமையில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. நம்மவர் என்றும் எங்கள் வாழ்வின் முதற்படி.. அமைச்சர்களே  இந்த தவறு நீடித்தால் கொடுப்போம் பதிலடி என்ற வாசகங்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அழகர் என்பவர் மதுரை மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் .

மேலும் படிக்க...ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு - தெற்கு ரயில்வே விளக்கம்

நேற்றைய தினம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கமல்ஹாசன் நடிப்பில் வல்லவர் அரசியலில் எல்.கே.ஜி என்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Madurai, Makkal Needhi Maiam