தி.மு.கவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் பத்ம பிரியா, அதிமுக விஜிலா சத்யானந்த்

பத்ம பிரியா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் செயலாளராக இருந்த பத்ம பிரியா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

 • Share this:
  யூட்யூப் பிரபலமாக இருந்தவர் பத்ம பிரியா. அவர், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து வீடியோ ஒன்றை அவரது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ யாரும் எதிர்பாராத வகையில் யூட்யூப்பில் ட்ரெண்டானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோ பார்த்து பகிர்ந்தனர். அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பரவியது. அதனையடுத்து, பா.ஜ.கவினர் பத்ம பிரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்.

  பா.ஜ.க எதிர்ப்புகளுக்கு பயந்து அந்த வீடியோ அவரது யூட்யூப் பக்கத்திலிருந்து நீக்கினார். அந்த வீடியோ மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நபராக மாறினார் பத்மபிரியா. அதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 34,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.

  தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகிய சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்ம பிரியா கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து பத்ம பிரியாவும் தி.மு.கவில் இணைந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல, அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பியாக இருந்தவரும் விஜிலா சத்யானந்த்தும் யாரும் எதிர்பாராதவகையில் தி.மு.கவில் இணைந்தார்.
  Published by:Karthick S
  First published: