நேர்மைதான் எங்கள் சரக்கு, நேர்மைதான் எங்கள் முறுக்கு - கமல் பேச்சு
நேர்மைதான் எங்கள் சரக்கு, நேர்மைதான் எங்கள் முறுக்கு - கமல் பேச்சு
கமல்ஹாசன்
பிற கட்சிகள் பணத்தை அதிகளவில் செலவு செய்தாலும், மக்கள் நீதிமய்யம் ரத்தத்தையும், வியர்வையையும் செலவு செய்வதாகவும், அதில் தனது ரத்தமும் கலந்து இருக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்
தமிழகம்தான் தமது இலக்கு என்று மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், தமிழக கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் சரியில்லை என பெயர்குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார்.
மேலும் பிற கட்சிகள் பணத்தை அதிகளவில் செலவு செய்தாலும், மக்கள் நீதிமய்யம் ரத்தத்தையும், வியர்வையையும் செலவு செய்வதாகவும், அதில் தனது ரத்தமும் கலந்து இருக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும் அடுக்குமொழியில் தங்களுக்கு பேசத்தெரியாது என்ற கமல்ஹாசன், நாங்கள் வேலை செய்ய வந்துள்ளோம் என்றார்.
நாடாளுமன்றத்தில், தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்ற கமல்ஹாசன், தமிழக ஆளும்கட்சியினர் ஜால்ரா அடிப்பதாக குறிப்பிட்டார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பேசிய கமல், நேர்மைதான் எங்கள் சரக்கு, நேர்மைதான் எங்கள் முறுக்கு என்றார்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.