தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்து தீவிரவாதி’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது பிரசாரம் நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்றுமுன்தினம் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார்.
கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதுசம்மந்தமாக, கமலின் மீது, வந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரவக் குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து ஓட்டப் பிடாரம் தொகுதியில் நேற்று 2-வது நாளாக பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இன்று கமலின் தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரம் செய்யவும் பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பங்கேற்கவும் காவல்துறையினர்அனுமதி வழங்கியுள்ளனர் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.
மேலும் கமல் ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... நாக்கை அறுப்பேன்னு சொன்னதை கமல் அட்வைஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.