Home /News /tamil-nadu /

தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் முன்வரலாம் - கமல் அழைப்பு

தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் முன்வரலாம் - கமல் அழைப்பு

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விரும்புவோர் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுவை பெறலாம் என கமல் ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
    நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட தகுதியானவர்கள் முன்வர வேண்டுமென, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், வரும் 28-ம் தேதி முதல் மார்ச்-7 வரை, சென்னை மற்றும் கோவை அலுவலகங்களில் தரப்பட உள்ளதாகக் கூறினார்.

    மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விரும்புவோர் மனுவைப் பெறலாம் என கமல் ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    விருப்ப மனுவிற்கான விண்ணப்பத் தொகை 10 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அலுவலகத்தில் மார்ச்-7க்குப் பிறகு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kamal hassan, Lok Sabha Election 2019

    அடுத்த செய்தி