Home /News /tamil-nadu /

மக்களவைத் தேர்தல் - கோவையில் போட்டியிடும் கமல்ஹாசன்?

மக்களவைத் தேர்தல் - கோவையில் போட்டியிடும் கமல்ஹாசன்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

தென் சென்னை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்சென்னையில் ஸ்ரீப்ரியாவும், கோவையில் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

  • News18
  • Last Updated :
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி உள்ள நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 21 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி வெளியிட்டார்.

அந்த வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.

மேலும், தென் சென்னை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்சென்னையில் ஸ்ரீப்ரியாவும், கோவையில் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Also See..

Published by:Mari S
First published:

Tags: Coimbatore S22p20, Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Tamil Nadu Lok Sabha Elections 2019, West Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி