Home /News /tamil-nadu /

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம்: கமல்ஹாசன்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஒரு நல்ல அரசை அரியணையில் ஏற்றி வைத்தால் கணக்கில் அடங்காத நலன்களைப் பெற முடியும் என்றார் கமல்ஹாசன்.

  • News18
  • Last Updated :
‘புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது’ என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் புதுச்சேரிக்கான நிர்வாகிகளை நியமித்த பின்னர்  கமல்ஹாசன் அவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக எப்படியெல்லாம் செயல்பட முடியுமோ? அவ்வாறெல்லாம் செயல்படுவோம். அதன் அடிப்படையிலேயே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறொம்.

ஒரு நல்ல அரசை அரியணையில் ஏற்றி வைத்தால் கணக்கில் அடங்காத நலன்களைப் பெற முடியும். திருடனைத் திருடன் என்றால் தான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் தெரியும் என்றார் கமல்ஹாசன்.

மேலும் பார்க்க: UBER கார் ஓட்டுனர்களை திட்டினால் பிளாக் செய்யப்படும்
Published by:Rahini M
First published:

Tags: Kamal hassan, Makkal Needhi Maiam, Puducherry, Puducherry Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி