• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து... அப்போவே சொன்னோம்: கமல்

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து... அப்போவே சொன்னோம்: கமல்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று கமல் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    வன்னியர் உள்  இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில்,  உள் இட ஒதுக்கீடு என்னும் மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன என்று மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் விமர்சித்துள்ளார்.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

    வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியர் பிரிவில் 7 சாதிகள் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன"  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: ஜெய்பீம்: சூர்யாவுக்கு மூன்று பாராட்டுக்கள்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: