மக்கள் நீதி மய்யக் கூட்டணியின் முதற்கட்ட வேட்பளார் பட்டியல் இன்று வெளியிடப்படும்.. கமல்ஹாசன்..

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

 • Share this:
  மக்கள் நீதி மய்ய கட்சியுடன், சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் ஐ.ஜே.க கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர். இருகட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், கமல்ஹாசன், சரத்குமார், மற்றும் ரவிபச்சமுத்து ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என்று கூறினார்.

  மேலும் படிக்க... அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக - விஜயகாந்த் அறிவிப்பு

  இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவகர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், தங்கள் கூட்டணி மூன்றாவது அணி அல்ல, முதன்மை அணி என்று கூறினார். மக்கள் நலனின் அக்கறை கொண்ட அனைவரையும் அரவணைக்கும் கடமை தங்களுக்கு உள்ளது எனவும், மக்கள் விரோத செயலலில் ஈடுபட்டு வரும் அனைவரையும் தான் எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: