Home /News /tamil-nadu /

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பு! தமிழக அரசுக்கும் கண்டனம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பு! தமிழக அரசுக்கும் கண்டனம்

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து இருக்கவேண்டிய தமிழக முதலமைச்சரும் உணவுத்துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் அமல் செய்வதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' அட்டை திட்டத்தை செயல்படுத்துவதற் கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன. மீதமுள்ள மாநிலங்களையும் இந்த திட்டத்தில் இணைப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது.

    தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இந்த திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக அஸ்ஸாம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலை வாய்ப்பு மற்றும் இதர காரணங்களுக்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடிபெயர்ந்து தமிழக நகரங்களில் வசிக்கின்றனர். தமிழகத்தின் மக்கள் தொகையில் 4 கோடி மக்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள்.

    ration, ரேஷன்
    ரேஷன் கடை


    உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நகரவாசிகளுக்கு 50% உச்சவரம்பு என்கிற ஆபத்து இருப்பதால், தமிழகத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் விவரங்கள் போன்றவை சரியாக இணைக்கப்படாமல், இந்த திட்டம் கவனக்குறைவாக அமல்படுத்தப்பட்டால் அது தமிழகத்தில் தற்போது இருக்கும் பொது விநியோக முறையை கடுமையாகப் பாதிக்கும்.

    ஏற்கெனவே 2017-ல் அரசு வகுத்த விதிகளின்படி,

    1) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை, மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்,

    2) பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்

    3) அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக உள்ள குடும்பங்கள்

    குடும்ப அட்டை பெறுவதில் நீக்கம் செய்வது போன்ற பொது விநியோக முறையில் மக்களுக்கு இருக்கின்றன தற்போதைய பிரச்னைகளை தீர்த்து, தமிழக குடும்ப அட்டைதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    பிற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த ஏழை குடும்ங்களுக்கு அளிப்பதற்கான தானியங்கள், மற்றும் அதனைச் சேமித்து வைத்து விநியோகிப்பதற்கும் இத்திட்டத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா என்று தெளிவான கொள்கை முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

    இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து இருக்கவேண்டிய தமிழக முதலமைச்சரும் உணவுத்துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.

    பல்வேறு உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்கிற திட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாச்சி அமைப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு திட்டம். இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Makkal Needhi Maiam, Ration card

    அடுத்த செய்தி