முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த 2 தடுப்பூசிகள் கொரோனா அபாயத்தை குறைக்க உதவும்.. ஆய்வில் தகவல்

இந்த 2 தடுப்பூசிகள் கொரோனா அபாயத்தை குறைக்க உதவும்.. ஆய்வில் தகவல்

 எம்எம்ஆர் மற்றும் டிடிஏபி ஆகிய தடுப்பூசிகள் கொரோனா தீவிரத்தை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எம்எம்ஆர் மற்றும் டிடிஏபி ஆகிய தடுப்பூசிகள் கொரோனா தீவிரத்தை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எம்எம்ஆர் மற்றும் டிடிஏபி ஆகிய தடுப்பூசிகள் கொரோனா தீவிரத்தை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

  • Last Updated :

    கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை உருவாகி விட கூடாது என்ற முனைப்பில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எம்எம்ஆர் ( Measles Mumps Rubella - MMR vaccine) மற்றும் டிடிஏபி (Tetanus Diphtheria Pertussis - Tdap vaccine) ஆகிய தடுப்பூசிகள் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான அதிகரித்த பாதுகாப்பு மற்றும் நோயின் தீவிரத்தை குறைப்பது உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எம்எம்ஆர் தடுப்பூசி என்பது அம்மை, தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பூசி ஆகும். முதல் டோஸ் பொதுவாக 9 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதன் இரண்டாவது டோஸ் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு முன்னால் போடப்படுகிறது. Tdap தடுப்பூசி என்பது உயிருக்கு ஆபத்தான டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகிய 3 பாக்டீரியா நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு கூட்டு தடுப்பூசி. அதே போல ஒருவர் தனது இளம் வயதில் Tdap தடுப்பூசி பெறவில்லை என்றால் இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் கட்டாயம் பெற வேண்டும். ஒரு டோஸ் Tdap தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு Td அல்லது Tdap பூஸ்டர் ஷாட் தடுப்பூசி எடுத்து கொள்ளப்பட வேண்டும்.

    இதனிடையே சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதற்கு எம்எம்ஆர் தடுப்பூசி அவர்களுக்கு போடப்பட்டுள்ளது ஒரு காரணமாக கருதப்படுகிறது. தவிர ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மேற்கண்ட இரு தடுப்பூசிகளுமே கடுமையான கோவிட் -19 அபாயத்தை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எம்எம்ஆர் மற்றும் டிடிஏபி தடுப்பூசிகள் தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு, குறுக்கு-எதிர்வினை நினைவக T- செல்களை (elicit cross-reactive memory T cells) பெற உதவ கூடும்.

    இந்த T செல்கள் SARS-CoV-2- ல் காணப்படும் வைரஸ் ஆன்டிஜென்கள் உட்பட, நோய்களை உண்டாக்க கூடிய நுண்ணுயிரிகளில் காணப்படும் ஆன்டிஜென்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டவை ஆகும். இந்த தகவலை அமெரிக்காவின் பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை (Brigham and Women’s Hospital) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர்கள், மார்ச் 8, 2020 - மார்ச் 31, 2021க்கு இடையில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 75,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தரவை பயன்படுத்தி சோதனை செய்தனர். இந்த ஆய்வில் முன்பே எம்எம்ஆர் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 38% குறைவாக இருப்பதை கண்டனர். தவிர ஐசியு-வில் சேர்க்கை / இறப்பில் 32% குறைவு காணப்பட்டதையும் கண்டறிந்தனர்.

    Also Read : கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு 6 மாதங்களில் குறைகிறதாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

    இதற்கு விளக்கம் அளித்த ஆராய்ச்சியாளர்கள், முந்தைய MMR அல்லது Tdap தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே SARS-CoV-2 தொற்றால் செயல்படுத்தப்பட்ட நினைவக T செல்கள் (memory T cells) நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதன் மூலம் கோவிட் -19 தொற்றின் அபாயம் குறைக்கிறது என்று கூறியுள்ளனர். இதன் மூலம் MMR அல்லது Tdap தடுப்பூசிகளை ஏற்கனவே போட்டு கொண்டிருக்கும் ஒருவர் கோவிட் -19 பாதிப்பை எதிர் கொண்டால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதற்கோ அல்லது இறப்பதற்கோ வாய்ப்புகள் குறைவு என்பது தெரிய வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேற்காணும் 2 தடுப்பூசிகளும் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு மாற்று இல்லை என்றாலும், இவை உருமாறும் கோவிட் -19 மாறுபாடுகளுக்கு எதிராக நல்ல திறனை வெளிப்படுத்த கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: