10 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள் கோரிக்கை

பத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை எவ்வித பாரபட்சமுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியும் கோரிக்கை வைத்துள்ளது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள் கோரிக்கை
கோப்புப்படம்
  • Share this:
பத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை எவ்வித பாரபட்சமுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் மு.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு பல்வேறு முக்கிய தினங்களில் ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை உடைய நீண்ட காலம் சிறையில் தண்டனை காலத்தைக் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. கடந்த எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று 15 முதல் 22 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் 47 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் விடுதலை மறுக்கப்படுகிறது.


கோவை சிறையில் இருக்கும் அபு (எ) அபுதாகீர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மீரான் மைதீன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்குப் போராடி வருகிறார். 75 வயதைக் கடந்து கோவை பாஷா 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

நன்னடத்தை விதிகளின்படி, 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டும்போது, ஒரு குறிப்பிட்ட சாராரை விடுவிக்க மறுத்து வருவதும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட முன் விடுதலையை மறுப்பதும் பாரபட்சமானது, சட்ட விரோதமானது” என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் கூறுகையில், ”இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களோ அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளோ விடுதலை செய்யப்படவில்லை. இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் முஸ்லிம் கைதிகளில் குண்டுவெடிப்பு வழக்கில் உள்ள கைதிகள் மட்டுமல்லாமல் சாதாரண கொலை வழக்கு கைதிகளும் விடுதலை செய்யப்படுவதில்லை.சிறை திருத்துவதற்குத் தானே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றார் மகாத்மா காந்தி. இதையெல்லாம் அரசு புரிந்துகொண்டு மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை வைத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் கைதிகள் அனைவரையும் மத, இன பேதம் பார்க்காமல் விடுதலை செய்யவேண்டும்” என்றார்.










Also see:
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading