சம்சா ஓகே... முட்டை பப்ஸ் நோ... ம.ம.க பொதுக்குழுவில் ருசிகரம்...!

சம்சா ஓகே... முட்டை பப்ஸ் நோ... ம.ம.க பொதுக்குழுவில் ருசிகரம்...!

சம்சா ஓகே... முட்டை பப்ஸ் நோ... மமக பொதுக்குழுவில் ருசிகரம்

’ம.ம.க.வும், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் இணையுமா?’ என்ற கேள்விக்கு, ``காலம்தான் பதில் சொல்லும்!” என்றார் ஜவாஹிருல்லா.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிறுபான்மையினருக்குத் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் 2021 மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது மற்றும் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ம.ம.க தேர்தல் இலச்சினை வெளியிடப்பட்டது.

பின்னர், ம.ம.க தலைவர் ஐவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மத்திய பட்ஜெட்டில் மாநில அரசுக்கு எந்தவித பயனும் இல்லாத செஸ் வரியால் விலைவாசி மேலும் உயரும். வேலைவாய்ப்பிற்கான எந்த வித திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் எதிர்ப்பை மீறி 8 வழிச்சாலை நிறைவேற்றுவோம் என்பது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக் காக்க பா.ஜ.க கல்யாணராமனைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்புகள் வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும், ம.ம.க கடந்த காலங்களில் சொந்த சின்னத்தில் தான் போட்டியிட்டுள்ளோம். வரும் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். கூட்டணியில் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை, இடங்கள் முதலானவை குறித்து பேச்சுவார்த்தையில் தெரியும்” என்றார்.

’ம.ம.க.வும், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் இணையுமா?’ என்ற கேள்விக்கு, ``காலம்தான் பதில் சொல்லும்!” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் தி.மு.க, கூட்டணிக் கட்சிகள் மற்றும் அனைத்து கட்சிகளும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Also read... பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு வாபஸ்...!

பருவ மாற்றத்தால் பெய்த பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணம் ஏமாற்றமளிக்கிறது.  அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

மனிதநேய மக்கள் கட்சி மண்டலப் பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே  தி.மு.கவிற்குச் சொந்தமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. காலை 10.30  மணியளவில் கூட்டம் தொடங்கியது. சுமார் 12 மணிக்குக்  கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு வழங்க டீ, சம்சா, முட்டை பப்ஸ் கொண்டு வரப்பட்டு சிறிய தட்டுகளில் வைக்கப்பட்டன. பின்னர் திடீரென பப்ஸ்களை எடுத்துக் கொண்டு வந்த பெட்டிக்குள் போட்டு, அவசர அவசரமாக வெளியில் தூக்கிச் சென்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். `இந்த மண்டபத்தில் அசைவம் அனுமதி இல்லை. ஆகையால் முட்டை பப்ஸ் கூட வேண்டாம் என்று கே.என்.நேரு சொல்லிட்டாருங்க!’ என்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: