பா.ஜ.கவில் இணைந்த சில மணி நேரத்திலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்புபெற்ற எம்.எல்.ஏ சரவணன்

எல்.முருகன், எம்.எல்.ஏ சரவணன்

பா.ஜ.கவில் இன்று மதியம் இணைந்த எம்.எல்.ஏ சரணவனுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் மருத்துவர் சரவணன். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்போருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர்.

  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் சரவணனுக்கு இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் இருந்த மருத்துவர் சரவணன், ‘இன்று மதியம் தி.நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் எல்.முருகனைச் சந்தித்து அவரது முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துகொண்டார்.

  இன்று மதியம் எம்.எல்.ஏ சரவணன், பா.ஜ.கவில் இணைந்தநிலையில், மாலை 3 மணி அளவில் பா.ஜ.கவின் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டார். அதில், மதுரை வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்கு சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்துக்குள்ளேயே தேர்தலில் போட்டியிட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: