பொய் வழக்கில் ஆந்திர சிறையில் அடைக்கப்பட்ட தமிழருக்கு ஜாமின் கிடைக்க உதவிய எம்.எல்.ஏ. ரோஜா

எம்.எல்.ஏ ரோஜா

பல வேலைகளுக்கு இடையிலும் முயற்சி செய்து அப்பாவியான தமிழர் ஒருவருக்கு ஜாமின் கிடைக்க உதவி செய்ததற்காக நன்றி தெரிவிப்பதாக எழுத்தாளர் பாமரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அரிசி கடத்தியதாக பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாகக் கருதப்படும் தமிழக ஆட்டோ ட்ரைவர் ஒருவருக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான ரோஜாவின் மூலம் ஜாமின் கிடைத்துள்ளது.

  ஊடகவியலாளர் ஜெரால்டு, எழுத்தாளர் பாமரனிடம் இதுகுறித்த விபரங்களைத் தெரிவித்ததையடுத்து, பாமரன் நடிகர் சத்யராஜிடம் பேசியதாகவும், நடிகர் சத்யராஜும் உடனடியாக இயக்குநரும், ரோஜாவின் கணவருமான ஆர்.கே செல்வமணியிடம் தெரிவித்து அதன் மூலமாக, எம்.எல்.ஏ ரோஜாவுக்கு இது தெரிவிக்கப்பட்டு உதவி செய்யுமாறு அணுகியதாகவும் பாமரன் பதிவிட்டுள்ளார்.  ஊடகவியலாளர்களிடம் தகவல்களை உறுதிசெய்து கொண்டு துரித நடவடிக்கைகளில் இறங்கிய ரோஜா, ஆந்திர போலீசார் பக்கமிருந்த சில போதாமைகளைச் சுட்டிக்காட்டி, ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் ஜாமினுக்கு உதவியாக இருந்துள்ளார்.

  பலரது துரித நடவடிக்கைகளால் இது நிகழ்ந்திருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக பல வேலைகளுக்கு இடையிலும் முயற்சி செய்து அப்பாவியான தமிழர் ஒருவருக்கு ஜாமின் கிடைக்க உதவி செய்ததற்காக நன்றி தெரிவிப்பதாக எழுத்தாளர் பாமரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: