Home /News /tamil-nadu /

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் விளக்கம்

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் விளக்கம்

கருணாஸ்

கருணாஸ்

  • News18
  • Last Updated :
    நான் பேசிய முழு வீடியோவை பார்த்தால்  அதில் எந்த தவறும் இல்லை என புரியும் என்று நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ”சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம்” என்று பேசினார்.

    மேலும் தமிழக முதல்வரை மேடையில் விமர்சித்த அவர் , குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில கருத்துகளை பேசியிருந்தார். மேலும் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டது குறித்தும் கருணாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதனை தொடர்ந்து கூவத்தூர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு இன்று பதிலளித்த கருணாஸ், அவர் பெரிய அரிச்சந்திரன் என்பது உலகத்திற்கே தெரியும் என விமர்சித்தார். மேலும் கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், சாதாரண தலைவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு கூட தனக்கு வழங்கவில்லை என்று வருத்தம் தெரிவித்த கருணாஸ், சாதி ரீதியில் தன் மீது தாக்குதல் நடக்கும் என்பதாலேயே தொகுதிக்கு செல்லவில்லை என்றார்.

    மேலும் முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார்.

    தான் பேசிய வீடியோ துண்டு, துண்டாக எடிட் செய்யப்பட்டுள்ளது. முழு வீடியோவை பார்த்தால் பேசியதில் தவறில்லை என புரியும் என்றும், பொது மேடையில் ஒருமையில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கருணாஸ் கூறினார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Karunas

    அடுத்த செய்தி