'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம்' - தமிழக அரசின் முடிவுக்கு கருணாஸ் பாராட்டு

கருணாஸ்

வன்னியர் சமூக இடஒதுக்கீட்டிற்கும் சாதி வாரியான கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை என்று முன்னரே நீண்ட அறிக்கையின் வாயிலாக நான் விளக்கமளித்துள்ளேன்.

 • Share this:
  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதற்கு நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கேட்டுக்கொண்டவாறு சீர்மரபினர், நாடோடிகள் (குறவர்கள்) அரைநாடோடிகள் கணக்கெடுப்பை ஏற்கெனவே மத்திய அரசு நடத்தச்சொல்லியிருக்கிறது. அதை நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இது வரவேற்கத்ததாகும். அந்த வகையில் தற்போது தமிழக அரசு சாதிவாரிய கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பின் வரவேற்கிறேன் என நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்ட சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தக் கூடாது என்றும், அது வன்னியர் உள்ளிட்ட பிற சமுதாய இடஒதுக்கீட்டு உரிமையை பாதிக்குமென்றும் மருத்துவர் இராமதாசு சமீபத்தில் அறிக்கைகள் வெளியிட்டார். அதை தொடர்ந்து தற்போது வன்னியர்களுக்கென்று 20 சதவீத இட ஒதுக்கீடும் வேண்டும் என்று போராட்டமும் நடத்துகின்றனர். வன்னியர் சமூக இடஒதுக்கீட்டிற்கும் சாதி வாரியான கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை என்று முன்னரே நீண்ட அறிக்கையின் வாயிலாக நான் விளக்கமளித்துள்ளேன்.

  ALSO READ |  #Exclusive | அத்திரவரதர் தரிசனம் – வரவு செலவில் குளறுபடி

  அதோடு மட்டுமல்ல மத்திய அரசு அறிவித்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்திடக்கோரி - 68 சமுதாய மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டுமென்று 21.10.2020 அன்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மற்றும் இது தொடர்பான விளக்க மனுவை அளித்துள்ளேன்.

  அதோடு மட்டுமல்ல நீண்ட காலமாக சட்டமன்ற அவையில் இதுகுறித்து தொடர்ந்து பேசியுள்ளேன். இந்நிலையில் தமிழக அரசு சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்க முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறேன்.  அதே சமயம் மேற்கண்ட ஆணையம் விரைவாக செயல்பட்டு அந்தந்த சமூகத்தினரின் சமூகநீதியை நிலைநாட்ட வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: