கொரோனா தீவிரம்: ஈரானில் உள்ள தமிழர்களை மீட்க கோரி எம்.எல்.ஏ இன்பதுரை முதல்வரிடம் மனு..!

தமிழகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஈரான் மற்றும் அருகில் உள்ள சிறு சிறு தீவுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்

கொரோனா தீவிரம்: ஈரானில் உள்ள தமிழர்களை மீட்க கோரி எம்.எல்.ஏ இன்பதுரை முதல்வரிடம் மனு..!
ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை
  • News18
  • Last Updated: March 9, 2020, 12:26 PM IST
  • Share this:
ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.

ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதலமைச்சரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உவரி கிராமத்தை சேர்ந்த திவான், சகாய ராஜேஷ், பினு ஆகியோர் தொலைபேசியில் தன்னை தொடர்புகொண்டு ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும், தமிழகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஈரான் மற்றும் அருகில் உள்ள சிறு சிறு தீவுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் உடனடியாக அவர்களை தாயகம் திரும்ப வழிவகை செய்யுமாறு தெரிவித்ததாக கூறினார்.

அதன் காரணமாக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த இன்பதுரை,  அவர்களை மீட்க  கோரி மனு கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் முதல்வர் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Also see...
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading