Home /News /tamil-nadu /

முதல்வர் ஸ்டாலினால் நிமிர்ந்த மைக்... வளைந்த மைக் யார் தெரியுமா? சட்டசபையில் எம்எல்ஏ எழிலன் பேச்சால் சிரிப்பலை

முதல்வர் ஸ்டாலினால் நிமிர்ந்த மைக்... வளைந்த மைக் யார் தெரியுமா? சட்டசபையில் எம்எல்ஏ எழிலன் பேச்சால் சிரிப்பலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin | சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மைக் நிமிர்த்தி பேசும் போது பார்பதற்கு கம்பீரமாய் இருக்கும் என்று ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரவித்தார்.

    சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் 110-விதியின் கீழ் நிறைவேற்றிய அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடபடும் என அறிவிப்புக்கு  நன்றி தெரிவித்தார். மேலும் இறுதியாக 110-விதியில் முதலமைச்சர் எழுந்து பேசும் போது இந்த அவையில் மைக் நிமிர்த்தி பேசுவார். அவர் பேசும் போது கம்பீரமாக இருக்கும் அவர் தான் மு.க.ஸ்டாலின், வளைந்த மைக் யார் என்று உங்களுக்கே தெரியும்? என பேசி முடித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

    இதை தொடர்ந்து பேசிய  திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா,  மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் காணப்பட்டதாகவும் தற்போதைய திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதாகத் தெரிவித்தார் .

    Also Read : இலங்கை மக்களுக்கு உதவ விசிக எம்எல்ஏ-கள் ஒரு மாத ஊதியம் நிவாரணம் - ஆளூர் ஷானவாஸ் அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர் If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும் வகையில் சிறப்பான ஆட்சியை அளித்து வருவதாகவும் பொதுவாக எல்லாருக்கும் இதயம் ல்ப்டப் லப்டப் என்று தான் துடிக்கும் ஆனால் விமர்சனங்களை வைக்கும் மனிதநேய இல்லாதவர்களுக்கு இதயம் டப் டப் என்று துடிக்கும் என பேசினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி