தண்ணீர் டேங்க் வைக்க ₹ 7.70 லட்சம் செலவா? வைரலான புகைப்படம் - எம்.எல்.ஏ விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்

திருப்பூரில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க 7.70 லட்சம் ரூபாய் என சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ., விளக்கமளித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருப்பூர் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் மாநகராட்சி சார்பில் பழைய கைப்பிடி பம்ப் ல் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு நான்கு இடங்களில் குழாய் பொருத்தி மோட்டார் திட்டு அமைக்கப்பட்டதுடன். டேங்க் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

  இதன் திட்ட மதிப்பீடு 7.70 லட்சம் ரூபாய். இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் பணிகள் குறித்து குறிப்பிடாமல் டேங்க் மீது செலவு என 7.70 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

  Also read... உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்த வடமாநில பெற்றோர் - கட்டணமின்றி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்  இதனை படமெடுத்த சிலர் சமூக வலைதளங்களில் ஒரு டேங்க் அமைக்க இவ்வளவு செலவா என கிண்டல் செய்து பதிவிட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த எம்.எல்.ஏ குணசேகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்ததாகவும் அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம் எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் செலவுக்கணக்கையும் வெளியிட்டுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: