முகப்பு /செய்தி /தமிழ்நாடு / #MKStalinToNews18TN - ட்விட்டரில் டாப் டிரெண்டாகும் முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பு நேர்காணல்

#MKStalinToNews18TN - ட்விட்டரில் டாப் டிரெண்டாகும் முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பு நேர்காணல்

நியூஸ் 18க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

நியூஸ் 18க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அளித்துள்ள முதல் சிறப்பு நேர்காணல் 'MKStalinToNews18TN' என ட்விட்டரில் டாப் டிரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ் 18க்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #MKStalinToNews18TN என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுகொண்ட பின்னர் அளித்துள்ள முதல் சிறப்பு நேர்காணல் இதுவாகும். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல், திராவிட மாடல்,2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.

இந்த நேர்காணல் இன்று ஒளிபரப்பான நிலையில், நேர்காணல் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் தான் ட்விட்டர் பக்கத்தில் #MKStalinToNews18TN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மக்கள் அதிகம் விவாதிக்கும் செய்திகள், நிகழ்வுகள் ட்விட்டரில் டிரெண்ட்டாவது வழக்கம். இந்த பதிவுகளுக்கு மக்களிடம் சிறந்த ரீச் உள்ளதை ட்விட்டர் டிரெண்ட்கள் குறிக்கின்றன. இந்நிலையில், #MKStalinToNews18TN என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதன் மூலம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த நேர்காணல் தான் இன்றைய டிரெண்டிங் டாபிக் என்பதை நிரூபணமாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்த 3 திட்டங்கள்தான் என்னுடைய வரலாற்றில் பதிவாகியிருப்பதாக நினைக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நேர்காணலில் வரப்போகும் மக்களவை தேர்தல் கூட்டணி, மாநில அரசின் உரிமைகள், திராவிட மாடல் ஆட்சி முறை கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான பதில்களை அளித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, News18 tamil, News18 Tamil Nadu