Home /News /tamil-nadu /

சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

அம்பை

அம்பை

Sahitya Akademi: சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அம்பை, மு.முருகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Sahitya Akademi: மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பிற்குரிய விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உயரிய விருதாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கவிஞர் மு.முருகேஷ் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற படைப்புக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள். தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும். கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். சிறார்களுக்கான எளிய - இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Sahitya Akademi

    அடுத்த செய்தி