முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9% அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வில் 93.76 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

இந்தநிலையில், 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்!

தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: 10th Exam Result, MK Stalin