• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘House of Khaddar’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார். காதி ஆடைகளை மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு இருமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


    கமல்ஹாசன் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: