ரஜினிகாந்த்துக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா சினிமா முழுவதும் சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் ரஜினிகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இன்று காலை முதலே அவரின் ரசிகர் காத்திருந்தனர். ஆட்டம் பாட்டம் என போயஸ் கார்டன் விழாகோலம் பூண்டது. இதேபோல் ரோபோ, முத்து, அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களில் ரஜினியின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிப்பது போல் அலங்காரம் செய்தபடியும் ரஜினி ரசிகர்கள் ரஜினியை பார்க்க ஆவளுடன் காத்திருந்தனர், இம்மாத இறுதிக்குள் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரஜினி அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் எதிர்காலமே, அரசியல் மாற்றம் இப்ப இல்லன எப்பவும் இல்ல, என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களும் போயஸ்கார்டனில் ஒட்டப்பட்டிருந்தது.

  தொண்டர்களின் வருகையை கட்டுப்படுத்த போயஸ்கார்டனில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரஜினி வீட்டை நோக்கி வரும் ரசிகர்கள் வழியிலேயே தடுக்கப்பட்டார்கள். ஆனால், ரசிகர்களைப் பார்க்க ரஜினிகாந்த் வரவில்லை.

  இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவில் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ அன்புள்ள ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ட்விட்டரில் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  இந்தநிலையில், ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: