ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MKStalin | டெல்லியில் கட்டப்படும் தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

MKStalin | டெல்லியில் கட்டப்படும் தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

டெல்லியில் கட்டப்படும் தி.மு.க அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து தேவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்களை எழுதி வந்தார். அத்துடன், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை விவகாரங்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கித்தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காரில் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து டெல்லியின் மின்டோ சாலையில் கட்டப்பட்டுவரும் தி.மு.க அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த அலுவலகம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு ஜூலை மாதம் திறக்கப்படும் என்று தெரிகிறது.

First published:

Tags: CM delhi visit, DMK, MKStalin