அண்ணா நினைவு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாசகங்கள் இவைதான்

அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்

அண்ணா காட்டிய அறிவுரையில் திமுக ஆட்சி வீறுநடை போட்டுவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பாதிப்பு காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்வராக பதவியேற்ற பிறகு, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். அதன் பிறகு தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், மருத்துவமனைகள், கண்காணிப்பு அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

  இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் தி.மு.க நிறுவனருமான அண்ணாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள அண்ணாவின் அரிய புகைப்படங்களை கண்டு ரசித்த ஸ்டாலின், அண்ணாவின் வாக்கியமான, ‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய் இது அண்ணாவின் வார்த்தை அவர் வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும் என்று அங்கிருந்த குறிப்பேட்டில் எழுதி கையெழுத்திட்டார்.


  இந்நிகழ்வில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு அண்ணா பெயர் சூட்டப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில் திட்டங்களை அரசு அறிவிக்கும் போது அது உங்களுக்கே தெரியும் என ஸ்டாலின் பதிலளித்தார்.
  Published by:Karthick S
  First published: