Home /News /tamil-nadu /

காத்திருக்கும் சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கவேண்டும் -ஆளுநரைச் சந்தித்து முதல்வர் வலியுறுத்தல்

காத்திருக்கும் சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கவேண்டும் -ஆளுநரைச் சந்தித்து முதல்வர் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி

மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி

சித்த மருத்துவ பல்கலைக்கழகம், கூட்டுறவு சங்க திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகை சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

    இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை வலியுறுத்தினார்.

    இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

    அதேடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவு 1983, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்டமுன் வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை , முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin, RN Ravi

    அடுத்த செய்தி