அரசுப் பேருந்துகளில் திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பேருந்துகளில் பெண்களைப் போலவே திருநங்கையர்களும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து முடிவுஎடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தின் முதல்வராக நேற்று மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமானம் எடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் தலைமைச் செயலகத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், ‘அங்கு முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்ற கோப்புகளில் கையெழுத்திட்டார்.

    அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.


    அதனையடுத்து, பெண்களைப் போல திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க உத்தரவிட வேண்டும் என்று திருநங்கையர்கள் பலரும் கோரிக்கைவைத்தனர். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமாரும், ‘தமிழக அரசுப் பேருந்துகளில் திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கைவைத்தார்.

    இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது கருணாநிதி காலந்தொட்டே தி.மு.க அரசின் வழக்கம். அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: