மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பட்ஜெட்தொடரில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின்

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

    ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மானாமதுரை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, வேளாண் பெருமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருவதாக கூறினார்.

    தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் உரை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருவதால் எதிரான தீர்மானம் நிறைவேற்றுவது மரபாக இருக்காது என்றும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published: