Home /News /tamil-nadu /

உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெறவேண்டும் - கோவை மக்களிடம் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரை

உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெறவேண்டும் - கோவை மக்களிடம் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெறவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  கோவை மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார உரையை மையத்திற்கு ஆயிரம் பேர் வீதம் 3 லட்சம் பேர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகரில் நடைபெறும் பிரச்சார காணொலி கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

  கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக முதல்வர் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கினார். அப்போது அவர், ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கதோடு தேர்தலை சந்திக்கிறோம். நம்ம ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓர் ஆண்டு கூட முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை முக்கால் பங்குக்கு மேலே முடித்துவிட்டோம்.

  அது நம்முடைய ஆட்சி என்று நெஞ்சை நிமிர்த்தி நாம் சொல்ல முடியும். கொரோனா காலமென்பதால் காணொளி மூலம் நடத்துகிறோம். இதுவே இது போன்ற முதல் நிகழ்ச்சி. நாராயண சாமி பிறந்த நாளில் இந்த கூட்டம் நடக்கிறது. இது மிகப் பொருத்தமாக இருக்கும். உழவர் வங்கி கடனைத் தள்ளுபடி செய்த ஆட்சி தி.மு.க ஆட்சி.

  கழக ஆட்சியில் தான் விவசயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய ஆட்சி கழக ஆட்சி. இந்த கூட்டத்தின் மூலம் நாராயண சாமிக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். கோவை பகுதியில் கொங்கு வேளாளரை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்தது கழக அரசு. இப்படி சாதனைகளை கடந்த ஆட்சியால் சொல்ல முடியுமா? இன்னுயிர் திட்டத்தில் 128 புது அடிக்கல் பணி, 3 பேரூராட்சியை நகராட்சி ஆகியுள்ளது.

  சில முத்தாய்ப்பான சாதனைகளை மட்டும் சொல்லியுள்ளோம். இந்தக் கூட்டத்தின் மூலமாக நாராயணசாமிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதி வாழ்ந்த ஊர் கோவை.
  கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க அரசு. கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்தும், அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதுவெல்லாம் தி.மு.க சாதனை சரித்தி்த்திற்கு சொந்தமானது.

  அ.தி.மு.கவால் இப்படி பட்டியிலிட முடியுமா? தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனைகளைப் பட்டியலிடுகின்றேன் என கூறி அவற்றை பட்டியலிட்டார். பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சியை வீழ்த்தி நம்மை மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். ஐந்து ஆண்டு காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதான் நல்ல ஆட்சிக்கு உதாரணம். ஆனால் ஓராண்டு காலத்திற்குள் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக தி.மு.க இருந்து வருகிறது.

  'நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் பொய்பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு உண்டு' : ஓ. பன்னீர் செல்வம்  உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெற்றால் தான் நாம் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் முழுமையாக சென்றடையும். கொரோனாவால் நேரில் சந்தித்து வாக்கு கூட்க முடியாத நிலை. அதனால்தான் காணொலி மூலம் கூட்டம் நடத்தப்படுகின்றது. உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நினைவு தினத்தில் கூட்டம் நடத்தப்படுவது சிறப்பு. நாராயணசாமியின் முக்கிய கோரிக்கைகள் நான்கு. கட்டணம் இல்லாத மின்சாரம், கடனை ரத்து செய்தல், வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, வேளாண்மையை தொழிலாக அங்கிகரிக்க வேண்டும் ஆகிய இந்த கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக அரசு’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Local Body Election 2022, MK Stalin

  அடுத்த செய்தி