முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு - மு.க.ஸ்டாலின் விளக்கம்

நிவாரண நிதி வழங்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி(மாதிரிப் படம்)

முதல்வர் நிவாரண நிதிக்கு 69 கோடி ரூபாய் வந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2.63 லட்சமாக குறைந்தது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கவில்லை. தற்போதுவரை தமிழத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 33,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

  அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால், படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டுவருகிறது. இதற்கிடையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்கினார்கள்.

  இந்தநிலையில், நேற்று முதல்வர் நிவாரணநிதிக்கு வந்த தொகையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நேற்று வரையிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் கொரோனா தடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக உயிர்வளி - மருந்துகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை, இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது.

  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது. இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருநுத, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்ஸிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டுவருவதற்கும் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயும் என்ற முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் செலவிட ஆணையிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: