முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் - வியந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் - வியந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி திருவள்ளுவரை வரைந்த ஓவியரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு தந்தவர் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர். திருக்குறளில் எந்த மதம் குறித்த வரையரையும் குறிப்பும் இல்லாதது அதன் சிறப்பாக கருதப்படுகிறது. உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் இருந்தாலும் அத்தனைக்கு முதன்மையானதாக திருக்குறள் கருதப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெறச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எப்போதும் எடுக்கப்பட்டுவருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருக்குறளின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். இரு அடிகளைக் கொண்ட திருக்குறளுக்கு பலரும் விளக்கவுரை எழுதியிருந்தாலும் கருணாநிதியும் அதற்கு விளக்கவுரை எழுதியிருந்தார்.

கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலையை நிறுவினார். தற்போது, முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினும், திருக்குறளை தேசிய நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்துள்ளார். இந்தநிலையில், ட்விட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற பெயரில் இருக்கும் ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தி திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து, கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள்வரை உள்ள தமிழ் எழுத்துகள் 741 கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: