முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தனித் தனித்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க வென்ற நிலையில், கடந்த 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளராக இறையன்பும், முதலமைச்சரின் தனிச் செயலாளராக செயலாளராக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுடைய நியமனம் புதிய அரசின் மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. முக்கிய பொறுப்புகளில் மேற்கூறிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

  இந்தநிலையில், ’இந்த 4 தனி செயலாளர்களுக்கு தற்போது தனி தனி பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. தனியாக இவர்களுக்கு சில துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் அதிக அனுபவம் மிக்க, தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய ஐஏஎஸ் உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  அதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி அனு ஜார்ஜூக்கு விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்திற்கு போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: