பிரதமர் மோடி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 3 கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியையும், பன்முகத்தன்மையையும பேணும் வகையில் உரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளையை புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியை, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசயங்கள் விரைவில் கவனிக்கப்பட வேண்டும் என்றும், இவை எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் கூறியுள்ளார். மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Supreme court