சீமான் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரைப்பட இயக்குநர் சீமான் இருந்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீமான் இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திவருகிறார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

  சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் வசித்துவந்தார். அவர், இன்று உயிரிழந்தார். சீமானின் தந்தை மறைவுக்கு அரசியல் கட்சிப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்திக் குறிப்பில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அன்புத் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையுற்றேன். தனது தந்தையை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: