நீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்

நீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்

மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை தடை செய்(ban neet) என்ற வாசகம் அடங்கிய டிசர்ட் அணிந்து தி.மு.க மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் சென்றுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Share this:
    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மைக்காலமாக வார இறுதி நாட்களில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் "தமிழ் எங்கள் உயிர்" என அச்சிடப்பட்ட டீ-சர்ட் அணிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படம் வெளியாகி பேஸ்புக் ட்விட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    அவர் அணிந்திருந்த வாசகமும் ட்ரெண்டான நிலையில் இன்று சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "நீட் தேர்வை ரத்து செய்" எனும் ஆங்கிலத்தில் வாசகம் அச்சிடப்பட்ட கருப்பு வண்ண டீசர்ட் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
    Published by:Karthick S
    First published: