சென்னை அண்ணா நகரிலுள்ள வைகோவின் இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து முதல்வர்
மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ வயது மூப்பின் காரணமாக தற்போது அதிக அளவில் கூட்டங்களில் கலந்துகொள்வது கிடையாது.

துரை முருகன், வைகோ, மு.க.ஸ்டாலின், துரை வைகோ
அவருக்கு பதிலாக அவரது மகன் துரை வைகோதான் தற்போது கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். இதற்கிடையில், கடந்த மாத இறுதியில் வைகோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்காரணமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலிருந்து விலகியிருந்தார்.
சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு.. இருவர் கைது!
இந்தநிலையில், சென்னை அண்ணாநகரிலுள்ள வைகோவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவருடன் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். இந்தச் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டுக்கும் அவரை அழைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடம் நடைபெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.