Home /News /tamil-nadu /

இரு மாநில மக்களின் நலனை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்- கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இரு மாநில மக்களின் நலனை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்- கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழக - கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி. 15.5 டி.எம்.சி., தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

    தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை விவகாரத்தில், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இருமாநில எல்லைகளில் பல சமயங்களில் பதற்றம் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரள மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக, பிரபல மலையாள நடிகர் பிரித்வி ராஜ், ‘முல்லைப் பெரியாறு அணையை இடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MKStalin, Pinarayi vijayan

    அடுத்த செய்தி