Home /News /tamil-nadu /

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை மாவட்ட கட்சி அலுவலகங்களில் கடைபிடியுங்கள் - தி.மு.கவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை மாவட்ட கட்சி அலுவலகங்களில் கடைபிடியுங்கள் - தி.மு.கவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழிப் போர் தியாகிகள் நினைவுநாள் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளை மாவட்ட கட்சி அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று தி.மு.கவினருக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஜனவரி 25-ஆம் நாள் - மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

    ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி