Home /News /tamil-nadu /

சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்- சென்னையில் நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்- சென்னையில் நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Vaccine for children | சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை சென்னை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

    நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது நாளை முதல் துவங்குகிறது. தமிழகத்தில் இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசுப்பள்ளியில் நாளை துவக்கி வைக்கிறார். ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஜன.3-ம் தேதியான நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

    இதற்கான முன்பதிவு கோவின் இணையதளமான https://www.cowin.gov.in தளத்தில் நேற்று முதல் தொடங்கியது. இந்தநிலையில், கோடம்பாக்கம் சாலை, மேட்டுப்பாளையம் மாந்தோப்பில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதிற்கு மேற்பட்ட 1,050 மாணவ- மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒமிக்ரான் பரவல்: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு உத்தரவு



     சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தில், 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-18 வயதுக்குட்பட்டோர் 33.46 லட்சம் பேர் உள்ளனர். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க உரிய இடம் ஒதுக்கி உரிய எற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும், பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைக் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் பதிவு செய்வது கட்டாயம் அல்ல எனவும், அதற்கேற்ப கோவாக்சின் தடுப்பூசிகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, MKStalin

    அடுத்த செய்தி