Home /News /tamil-nadu /

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் - நாளை மறுதினம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் - நாளை மறுதினம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pongal gift | MKStalin | பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வழங்கம் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் தொடங்கிவைக்கிறார்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு, அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு



    தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.


    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியாய விலைக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காரணமாக ஜனவரி 7ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: MKStalin, Pongal Gift

    அடுத்த செய்தி