பரிசாக வந்த 1,000 புத்தகங்களை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

புத்தகங்கள் வழங்கும் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 நூல்களை சென்னை எழுப்பூர் கன்னிமாரா நூலகத்துக்கு வழங்கினார்.

  • Share this:
பூங்கொத்து பொன்னாடைகள் வேண்டாம் புத்தகங்களை தன் பிறந்த நாள் பரிசாக வழங்குங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க தொண்டர்களுக்கும் தன்னை சந்திக்க வரும் நபர்களுக்கும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை யார் சந்தித்தாலும் அவர் கூறியதைப் போல புத்தகங்களை வழங்கி அவரை சந்திக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் கொரோனோ நிவாரணம் வழங்க  தலைமைச் செயலகம் சென்ற பொழுது 50 லட்ச ரூபாய் காசோலை மட்டுமின்றி மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களையும் வழங்கினார்.
இந்த நிலையில் தனக்கு பரிசாக வந்த 1,000 புத்தகங்களை சென்னை, எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

புத்தகங்களுடன் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்து கூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 புத்தகங்களை சென்னை, எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள  அலுவலகத்தில், இன்று பொது நூலக இயக்கக இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷிடம் வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் பல்வேறு தலைப்புகளை கொண்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளதால் இனி கன்னிமாரா நூலகம் செல்லும் வாசிப்பாளர்கள் தமிழக முதலமைச்சர் வழங்கிய புத்தகங்களையும் படிக்க முடியும்.
Published by:Karthick S
First published: