முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முறைகேடு செய்தவர்களுக்கு தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா? நகைக் கடன் விவாதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

முறைகேடு செய்தவர்களுக்கு தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா? நகைக் கடன் விவாதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

நகைக்கடன் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

  • Last Updated :

சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் இல்லாத வெற்று அறிக்கையாக உள்ளதென்றும், நகை கடன் தள்ளுபடி என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அனைத்து நகைக் கடனையும் தள்ளுபடி செய்ய சொல்கிறீர்கள். 48 லட்சம் நகை கடன்கள் உள்ளது. ஆனால் ஆய்வு செய்த பொழுது முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தகுதியான 14.60 லட்சம் பேருக்கான நகை கடன் தள்ளுபடி தற்பொழுது இறுதியாகியுள்ளது. மாத இறுதிக்குள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்து ரசீது கொடுக்கப்படும், என தெரிவித்தார்.

அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ‘5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்தது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. தகுதியுடைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யபடும். திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று கருதி நகைக்கடனை மக்கள் பெற்றனர். ஆனால் அதில் முறைகேடுகள் நடந்துள்ளதென குறிப்பிட்டார்.

அப்போது மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்று நம்பி தானே மக்கள் நகைக்கடனை பெற்றனர் என குறிப்பிட்டார்.

குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முறைகேடுகளில் ஈடுபட்டு நகை கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? முறைகேடுகள் நடந்ததை எதிர்கட்சி தலைவர் ஆதரிக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘முறைகேடுகள் நடந்ததை நான் ஆதரிக்கவில்லை. முறைகேடுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரியானதுதான். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பியே மக்கள் நகைக்கடன் பெற்றனர் என தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

top videos

    அதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நகைக்கடன் பெற்று பல இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஆட்டோ டிரைவர் என்னை தொடர்பு கொண்டு, தான் ஒரு ஆட்டோ டிரைவர் ஆனால் தன்னை அரசு ஊழியர் என தவறாக ஆதாரில் குறிப்பிட்டு உள்ளதாகவும், தனக்கு நகை கடன் தள்ளுபடி வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதுபோன்று தகுதியானவர்கள் உரிய ஆதாரத்துடன் அணுகினால், அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Edappadi Palaniswami, MK Stalin, TN Assembly