ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லாக் அப்பில் விக்னேஷ், தங்கமணி மரணம் - மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

லாக் அப்பில் விக்னேஷ், தங்கமணி மரணம் - மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

லாக்அப் மரணம் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சட்டப்பேரவையில், காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, லாக் அப் மரணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

  அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘விக்னேஷ் மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதோடு, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், விக்னேஷ், தங்கமணி மரணங்களில் அரசு எதையும் மறைக்கவில்லை. ஒளிவுமறைவின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்..

  மேலும், சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில் அதிமுக ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய அவர், இந்திய வரலாற்றில் முதன்முறையாக சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறையின் கீழ் கொண்டுவந்தது நீதிமன்றம் என்றும், விக்னேஷ், தங்கமணி வழக்குகளில் குற்றவாளிகளை அரசு காப்பாற்றாது என உறுதியளித்தார்.

  தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர், சரியாக விசாரணை நடக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கு தெரியும் என்றும் சி.பி.ஐ விசாரித்தால் தான் உரிய நீதி கிடைக்கும் என கூறினார்.

  அதேபோல், சாத்தான்குளம் வழக்கு விசாரணை நேர்மறையாக நடைபெற்றதாக கூறிய அவர், தமிழ்நாடு காவல்துறை செயலிழந்துள்ளது என்றும், அரசு அதிகாரிகள் தரும் அறிக்கையைத் தான் முதலமைச்சராக இருந்த நானும் வாசித்தேன். மு.க.ஸ்டாலினும் வாசிக்கிறார் எனவும், முதலமைச்சர் நேரில் சென்று பார்த்து அறிக்கையைத் தயாரித்தாரா?வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்.

  குட்கா, கஞ்சா குறித்து பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  அப்போது பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக ஆட்சியில் இருந்த காவல்துறையினர் தான் தற்போதும் இருக்கிறார்கள் என்றும், சி.பி.ஐ விசாரணை கேட்பது ஜெயலலிதாவின் கருத்துக்கே எதிரானது என கூறினார்.

  தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் எந்த லாக் அப் மரணமாவது சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர், விக்னேஷ், தங்கமணி மரணம் விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என கூறியதால் விவாதம் முடிவிற்கு வந்தது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Edappadi Palaniswami, MK Stalin